ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு எதிராக இலங்கை சோ.ச.க./IYSSE நடத்திய கூட்டம் சோசலிச வேலைத்திட்டத்தில் வளர்ந்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது
ஒரு பரந்த உலகளாவிய மோதலாக விரிவடைய அச்சுறுத்தும் ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராக ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத் தேவை குறித்து, சோ.ச.க. கொழும்பில் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டம் சூம் மற்றும் கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுடன், அதிகளவான மக்கள் கலந்துகொண்டனர்.
